அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

Noolaga Nanbargal Scheme | Friends of Library Scheme | நூலக நண்பர்கள் திட்டம்

Noolaga Nanbargal Scheme | Friends of Library Scheme | நூலக நண்பர்கள் திட்டம்

Noolaga Nanbargal Scheme

பொது நூலக இயக்குனர் (மு.கூ.பொ) இளம்பகவத் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நூலக நண்பர்கள் திட்டம் நோக்கம்

குறைந்த செலவில் சிறந்த நூலக சேவை என்ற நோக்கத்தின் அடிப்படையில் பொது நூலகத்துறை சமூக வளர்ச்சியில் பங்கெடுப்பதோடு, பொது நூலக இயக்கமானது, பொது மக்களின் அறிவார்ந்த தேவையை ஈடுசெய்வதற்கேற்ற நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தரமான புதிய நூல்களை வாங்கி வழங்குவதன் மூலம் சிறந்த நூலக சேவை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

Read Also: Social Service Award in Tamil

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினை பூர்த்தி செய்வது பொது நூலகத்துறையின் குறிக்கோளாகும். நூலக சேவையை பயன்படுத்த நூலக நண்பர்கள் என்ற இயக்கம் ஏற்படுத்தி சமூக பங்களிப்புடன் கூடிய நூலக சேவை வழங்குவது அவசியமாகிறது.

நூலக நண்பர்கள் தன்னார்வலர்கள்

இத்திட்டத்தில் தன்னார்வலர்கள், நூலகங்களில் இருந்து புத்தகங்களை நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்கள் இல்லங்களுக்கு எடுத்து சென்று வழங்குவர். இத்திட்டத்தினை செயல்படுத்த நூலகங்களின் எண்ணிக்கை மற்றும் தன்னார்வலர்களின் தேவை குறித்து அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் பரிசிலீக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இணைப்பில் காணும் 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேர கிளை நூலகங்கள், 1463 கிளை நூலகங்கள் மற்றும் 706 ஊர்புற நூலகங்கள் ஆக மொத்தம் 2500 நூலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட நூலகங்களில் ஒரு நூலகத்திற்கு 5 தன்னார்வலர்கள் வீதம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்த அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் நூலகங்களில் அதன் செயல்பாடு மற்றும் இத்திட்டத்தின் பயனாளர்கள் தேவை ஆகியவற்றை பொருத்து தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நூலகங்களை மாற்றி வேறு நூலகங்களை தேர்வு செய்து கொள்ளவும், ஒரு தனி நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின் எண்ணிக்கையினை மாற்றம் செய்து கொள்ளவும் மாவட்ட நூலக அலுவலர்களுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

நூலக நண்பர்கள் திட்டத்தில் பங்கு பெறும் தன்னார்வலர்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க மாவட்ட நூலக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தன்னார்வலர்கள் தங்களது பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் இருந்து ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச்சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திரும்ப பெற்று நூலகத்திற்கு வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் சேரும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மேலும் சிறப்பாக செயல்படும் நூலக நண்பர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை ரூ 500 மதிப்பிலான பரிசு வழங்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்களின் விவரம், அவர்கள் எடுத்து செல்லும் மற்றும் திரும்ப அளிக்கும் நூல்கள் விவரம் மற்றும் இத்திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் கைப்பேசி செயலி மூலம் பொது நூலக இயக்ககத்தால் கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Noolaga Nanbargal Scheme Pdf – Download Here

Related Articles

Latest Posts