திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 14ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பொிதும் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.