You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தற்போது இல்லை கல்வி அமைச்சர் பேட்டி

Tito Jack teacher organsiation news

மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அவா் நேற்று அளித்த பேட்டி, 

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில், மூன்று அல்லது நான்கு மாதங்கள் தாமதத்திற்கு பின், 13 வகை கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. 

இந்த முறை 1,141 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை பள்ளி துவங்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், தமிழகத்திற்கு வர வேண்டிய 600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மத்திய அரசிடம் கடந்த மாதம் நேரடியாக வலியுறுத்தி உள்ளோம். 

இப்பிரச்னைக்கு தீர்வு காண, முதல்வரின் ஆணைப்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீா்ப்பு கிடைத்தது, மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கட்டணமின்றி சேர்க்கப்படுவர். கடந்தாண்டுகளில் பள்ளிகில் ஆசிரியர்- மாணவர் மோதல் சம்பவங்கள் அரங்கேறின. நடப்பு கல்வியாண்டில் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், பள்ளி திறந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனரீதியான வாழ்வியல் திறன் சார்ந்த வகுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

மாநில கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் உள்ளது. விரைவில் அதை அவர் வெளியிடுவார், இவ்வாறு அவர் கூறினார்.