பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நிருபர்களிடம் கூறும்போது, ஏற்கனவே அறிவித்தபடி, தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படமாட்டது. அதே சமயத்தில் அவர்களுக்கான பொதுதேர்வு நிச்சயம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முக கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்ச்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்து செல்லாம். இவ்வாறு அவர் கூறினார்.