தமிழகம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த நான்கு ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கல்வி இயக்குனர், துணை இயக்குனர்கள் மேற்பார்வையில், பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது. அண்ணா பல்கலைகழகம் நடத்தும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோா் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது. பதிவு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 20. மேலும் விவரங்களுக்கு 044-22358289. முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்பு 20ம் தேதி தொடங்கும் நிலையில், ஆள்மாறாட்டத்தை தடுக்க, மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 2ம் தேதியில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஒரு மாணவி நீட் தேர்வு எழுதிய நிலையில், மாதிரி விடைத்தாளில் 720க்கு 520 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, 19 மதிப்பெண் மட்டுமே பெற்றார். விடைத்தாள் மதிப்பீடு கோரி தேசிய தேர்வு முகமைக்கு (NTA) விண்ணப்பித்தார். இதற்கிடையில், தனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், விடைத்தாளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தேசிய தேர்வு முகமைக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மனு தொடர்பாக, தேசிய தேர்வு முகமை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். போலி நீட் மதிப்பெண் சமர்ப்பித்த விவகாரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷாவை தனிப்படை போலீசார் பெங்களூரில் கைது செய்து, நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு, அவரது தந்தை பல் மருத்துவர் பாலசந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்ற மாணவி, தீக்ஷா போலியாக மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து, மருத்து கலந்தாய்வில் சமர்ப்பித்தபோது, கையும் களவுமாக சிக்கினர். முக்கிய காரணம், அவரது தந்தை தனது மகளை எப்படியாவது மருத்துவ படிப்பில் சேர்க்க வேண்டும் என்று குறுக்குவழி. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யாமலும், பள்ளி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும், பள்ளிகளில் தூய்மை பணி முறையாக நடக்கவில்லை என்றும், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, திருப்புல்லாணி உள்ளிட்ட ஊரக பகுதிகளில் முறையான குடிநீர் வசதி இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது போல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கலசபாக்கத்தில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அங்கு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராணிப்பேட்டை அரசு மகளில் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 2017-18ம் கல்வியாண்டில் படித்த எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி முன்ளாள் பள்ளி மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார்கள்.