NMMS HALL TICKET RELEASES |என்எம்எம்எஸ் ஹால்டிக்கெட் இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 5.3.2022 அன்று தேர்வு நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.02.2022 அன்று பதவிறக்கம் செய்யலாம்.
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS EXAM) 5.3.2022 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.02.2022 அன்று பதவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.