அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024-2025ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 2025, பிப்ரவரி மாதம் 22ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்விற்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் பொருட்டு என்எம்எம்எஸ் தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பிப்ரவரி 22ம் தேதி அன்று நடை பெற உள்ளது.இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதி (நாளை) முதல் பிப்ரவரி 24ம் தேதி வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆன்ைலன் கட்டணத் தொகை ரூ50 சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2025 கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை காணலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.