Nipah Virus Schools Colleges leave | நிபா வைரஸ் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
Nipah Virus Schools Colleges leave
கேரளாவில் நிபா வைரஸ் கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும் இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
நிபா வைரஸ் பாதிப்பால் காய்ச்சல், மூச்சுத்திணறல், மூளை அழற்சி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். இந்த காய்ச்சல் பாதிப்புக்குள்ளானால் 70 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த வைரஸ் கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் செப்டம்பர் 11ம் தேதி உயிரிழந்தனர். தற்போது 789 கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.
அதன்படி கோழிக்கோடு மாவட்டத்தில் செப்டம்பர் 24ம் தேதி வரை பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள – தமிழ்நாடு எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி சில பகுதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.