Nilgiris Teacher under suspension | இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்
Nilgiris Teacher under suspension
மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த தவறிய இடைநிலை ஆசிரியர் எஸ் அருண்குமாரை, உதகமண்டலம் கல்வி அலுவலர் (பொ) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அவரது இடைநீக்கம் செய்யப்பட்ட ஆணை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த ஆணையில், எஸ் அருண்குமார் கூடலூர் வட்டாரத்தில் உள்ள ஐ மைல் நடுநிலை ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், இவர் மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்தவில்லை என்றும் புகார் பெறப்பட்டது. இதுதவிர, இவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மேலும், அவர் வட்டார கல்வி அலுவலர், பள்ளி தலைைம ஆசிரியா் மற்றும் சக ஆசிாியரை அவ்வப்போது தகாத வார்த்தைகளால் வசைபாடி அசிங்கப்படுத்துவதாகவும் தெரியவருகிறது. புகாரின் அடிப்படையில், எஸ் அருண்குமார் விதி 17ன் கீழ் நடவடிக்கை உட்படுத்தப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இவருக்கு அடிப்படை விதியின்படி, பிழைப்பு ஊதியம் சஸ்பெண்ட் காலத்தில் வழங்கப்படும். மேலும் சஸ்பெண்ட் காலத்தில் அருண்குமார் எவ்வித முன்அனுமதியின்றி வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.