அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

New Health Insurance Scheme for Government Employees அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம்

New Health Insurance Scheme for Government Employees அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு, பணச்செலவில்லாமல் மருத்துவ வசதியை வழங்குவதே மருத்துவ காப்பீட்டு திட்டம். தற்போது இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு காலம்

இந்த மருத்துவ காப்பீட்டு வசதி 1.7.2021ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதால், 30.6.2025 வரை பயன்படுத்தலாம்.

மருத்துவ காப்பீட்டு தொகை

அரசாணை (பல்வகை) எண் 160 நிதி (ஊதியம்) துறை நாள் 29-06-2021 இணைப்பு -1ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: General Provident Fund Interest Rate 2021 Full Details

ஏழு வகை நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ பத்து லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு ரூ-20,00,000 லட்சம் வரை நிதிதுறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர் மட்ட குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு தொகை சந்தா

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ன் படி, மாதாந்திர சந்தா ரூ.300 ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியராக இருப்பின், இருவரில் யார் இளையவரோ, அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும்.

காப்பீட்டு திட்டத்தில் இணைய என்ன தகுதி?

கீழ்கண்ட வகையில் நியமனம் பெற்று, பணிபுரிவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

  • Consolidated Pay/Fixed Pay/ Honorarium
  • Daily Wage
  • Re- Employment
  • Temporary basis under rule 10(a)(i) of Tamil Nadu State and Sub-Ordinate Services Through Employment Exchange
  • Outsourcing

சிகிச்சைகளுக்கான காப்பீடு

மொத்தம் 1,169 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா சிகிச்சை ரூ 5 லட்சம் வரையிலும், மற்றும் 7 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செல்வில்லா சிகிச்சை ரூ. 10 லட்சம் வரையிலும் வழங்கப்பட உள்ளது.

மேலும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 180 வகையான பொருட்களுக்கு செலவு தொகைகள், பணச்செலவில்லா சிகிச்சையின் வரம்பிற்குள் வராது

அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அச்சிகிச்சை அவசர தன்மை உடையது என கருதப்படும்பட்சத்தில், சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்தியபின், அத்தொகையில் தகுதியான செலவு தொகையை திரும்ப பெறலாம்.

மேலும் சிகிச்சையில் அவசர தன்மையற்றது என கருதப்படும் பட்சத்தில் சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்தியபின், அச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட கடைநிலை மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், ஏற்படும் செலவினத்தொகையில் 75 தொகையை மீள பெறலாம்.

குடும்ப உறுப்பினர்கள் யார்?

  1. கணவன் அல்லது மனைவி
  2. குழந்தைகள் – 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை – (இதில் எது முன்னரோ)
  3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் (அரசு ஊழியர்களுக்கு திருமணம் ஆகும் வரை.)
  4. விவகாரத்து பெற்ற அரசு ஊழியர்களுக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அவரது பெற்றோர்கள்.
  5. அரசு ஊழியரை சார்ந்து இருக்கும் குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வரம்பின்றி)

காப்பீட்டு தொகை தொடர்பான புகார்களை எவ்வாறு முறையிடுவது?

இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் சிகிச்சை மற்றும் காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனரிடம் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களின் நகல்கள் மற்றும் தொகை மீளப்பெறுவதற்கான படிவத்துடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனு செய்து முறையிடலாம்.

முறையீடு தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தொகை மீளப்பெறுவது தொடர்பான தகுதி அறிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தின் பரிந்துரைக்கு மேலனுப்பப்படும்.

அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்ட தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள்

காப்பீட்டு திட்டம் புகார் தொடர்பாக சந்ததாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 233 5666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட அளவிலான காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரிகள் அலைபேசி எண் பெற்று தகவல் தெரிவிக்கலாம்.

Related Articles

Latest Posts