New Engineering College Permission 2023 | புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி
New Engineering College Permission 2023
நாடு முழுவதும் புதிய பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை 2023-2034 கல்வியாண்டு முதல் நீக்கப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்பம் கவுன்சில் (ஏஐசிடிஇ) வியாழக்கிழமை அறிவித்தது.
பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்ததை தொடர்ந்து இந்த இரண்டு ஆண்டு ஆண்டுகள் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் கொண்டு வந்தது.
Read Also: பொறியியல் படிப்புக்கு எப்படி கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடுவது
இந்த தடை தற்போது நீக்கப்படுவதாக ஏஐசிடிஇ அண்மையில் வெளியிட்ட 2023-2024 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய அனுமதி வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. கல்லூரிகள் அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஏப்ரல் 6ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது.