NET Exam Details 2023 in Tamil | நெட் தேர்வு அறிவிப்பு
NET Exam Details 2023 in Tamil
நெட் (தேசிய தகுதி தேர்வு ) அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு (
யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்த தேர்வு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
ஆராய்ச்சி (பிச்.டி) படிப்பை மேற்கொள்பவர்கள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (ஜேஆர்எப்) பெற தகுதி பெறுவதற்கும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியை பெறுவதற்குமான இந்த நெட் தேர்வு யுஜிசி சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தற்போது 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை தேர்வு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
Read Also: நுழைவுத் தேர்வு வெற்றி பெற குறிப்புகள்
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் வியாழக்கிழமை கூறுகையில், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், 83 பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியை பெறுவதற்குமான கணினி அடிப்படையிலான இந்த நெட் தேர்வை 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை யுஜிசி நடத்த உள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க 2023ஆம் ஆண்டு ஜனவாி 17ம் தேதி கடைசி நாளாகும்,
என்றார்.