நீட் தேர்வு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
நீட் தேர்வு ஹால்டிக்கெட்
மருத்துவ படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டை மாணவர்கள் இன்று முதல் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also This: எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எம்பிபிஎஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர், நீட் தேர்வு எழுதுவது கட்டாயம்.
இந்த ஆண்டுக்கான நீட் தோ்வு, 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 1.42 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும் இருந்து, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான விண்ணப்ப பதிவு, சாிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன. தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள்
http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.