ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மாலை தனது #twitter பக்கத்தில் மாணவர்களுக்கான மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான #MBBS, #BDS நீட் நுழைவுத் தேர்வு NEET EXAM 2021 செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
NEET EXAM 2021 மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் ஜூலை 13ம் தேதி மாலை 5 மணி முதல் துவங்கப்படும் எனவும், மாணவர்கள் #NTA (National Testing Agency) இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலை கருத்தில் கொண்டு, சமூக விலகலை பின்பற்றி, நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் (NEET EXAM CENTERS 2021) அதிகப்படுத்தப்பட உள்ளன. தேர்வு நடைபெறும் நகரங்கள் எண்ணிக்கை 155 லிருந்து 198 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மாணவர் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு முக கவசம் தேர்வு மையத்தில் வழங்கப்படும். இதுதவிர, மாணவர்கள் பாதுகாப்பு கருதி, சமூக விலகலுடன் இருக்கை அமைப்பு, கை சுத்தம் திரவம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தது, கொரோன பாதிப்பு இரண்டாவது அலை காரணமாக, ஒத்தி வைத்திருந்தது.
இதற்கிடையி்ல், மாநில சுகாதாரத்துறை அமைச்சர், மா.சுப்பரமணியம் நீட் தேர்வு குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது, நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதே சமயத்தில் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார்.