உத்தரபிரதேசத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கிவிட்டன.
பொதுத்தோ்வு
உத்தரபிரதேசத்தில் கடந்த 4 நாட்களாக 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, கூடுதல் தலைமை செயலர் (இடைநிலை கல்வி)ஆராதனா சுக்லா கூறும்போது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால், இன்று (நேற்று) 2.9 லட்சம் பேர் அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை். கடந்த நான்கு நாட்களில் 7.8 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. அதே 2020ஆம் ஆண்டு 4.8 லட்சமாகவும், 2019ஆம் ஆண்டு 6.5 லட்சமாகவும் இருந்தது. நடப்பாண்டு அதிகளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தொற்று நோய் பரவல் காரணமாக தேர்வுகள் எழுதவில்லை என்று கருதுகிறோம். ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாணவர்கள் இந்தாண்டு தேர்வில் பங்கேற்கவில்லை. மார்ச் 26ம் தேதி நடைபெற்ற மொழித்தாளில் 70,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.