அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

National Youth Festival in Tamil | தேசிய இளைஞர் விழா

National Youth Festival in Tamil | தேசிய இளைஞர் விழா

National Youth Festival in Tamil

தேசிய இளைஞர் விழா சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது

தேசிய இளைஞர் விழா

National Youth Festival எனப்படும் தேசிய இளைஞர் விழா இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. எதற்காக நடத்தப்படுகிறது என்றால், சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை, தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடப்பட்டு, இதன்மூலம் இளைஞர்களின் தனித்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு போட்டி அறிவிப்பு:

தமிழக அளவில் இந்த போட்டி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, இந்த போட்டி மெய்நிகர் நடைமுறை (Virtual /Hybrid Mode) அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் டிசம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், தேசிய அளவிலான போட்டிகள் ஜனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் நடக்கிறது.

இந்த போட்டிக்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைவராக இருப்பதால், மாவட்ட அளவில் அவர்கள் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவர்கள், மாநில போட்டிக்கும், மாநிலத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பார்கள்.

Also Read: Anna Cycle Race Coimbatore 2022 | அண்ணா சைக்கிள் போட்டி ரூ.5 ஆயிரம் முதல் பரிசு

தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறும்போது, தனி நபருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாயும், குழு போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை காசோலையாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 28ம் தேதி.

தேசிய இளைஞர் விழா போட்டி விதிமுறைகள்

தகுதி:

15 முதல் (31.12.2020 அன்றயை தேதியில்) 29 வயது நிரம்பிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாதவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டி பிரிவுகள்:

மொத்த போட்டிகள் -18, தனி நபர் போட்டிகள் -11, குழு போட்டி – 07.

போட்டி விதிமுறைகள் என்னென்ன?:

  • முதல்நிலை போட்டி மாவட்ட அளவில் மெய்நிகர் முறைப்படி நடக்கும்.
  • போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அவர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • போட்டிக்கான பதிவினை (Video Recording) நல்ல தெளிவான ஒளி/ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு (Application) இணைந்து மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் (மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் (https://www.sdat.tn.gov.in/) உள்ளது).

Application format is below in download options

  • மாவட்ட அளவிலான போட்டிகளின் முடிவுகளை மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.
  • மேலும் விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், நேருயுவகேந்திர மாவட்ட அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

என்னென்ன போட்டியில் நீங்கள் பங்கேற்கலாம்:

மொத்தம் ஏழு வகை போட்டிகள் உள்ளன, இசை (Music), நடனம் (Dance), உடை அலங்காரம் (Regional Attire Show), நாடகம் (Theater), காட்சிக் கலைகள் (Visual Arts), எழுத்தாற்றல் (Expression Art), பாரம்பரிய விளையாட்டு(Indigenous Games).  

Related Articles

Latest Posts