You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

National Education Policy abbreviation 2020 | தேசிய கல்விகொள்கை 2020 | NEP 2020 |

|

National Education Policy abbreviation 2020 | தேசிய கல்விகொள்கை 2020 | NEP 2020 |

National Education Policy abbreviation 2020 | தேசிய கல்விகொள்கை 2020 | NEP 2020 |

அனைவருக்கும் வணக்கம், இந்த தகவல் தொகுப்பில் தேசிய கல்வி கொள்கை 2020 (National Education Policy 2020) புத்தகத்தில் உள்ள சுருக்கக் குறியீட்டு விளக்கம் அதாவது, New Education Policy 2020 - list of Abbreviations used நாம் பார்க்க உள்ளோம்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை National Education Policy 2020 வெளியிட்டுள்ளது. அதில், கிட்டதட்ட 154 பக்கங்களில் உள்ளது. பள்ள கல்வி, உயர்கல்வி, உயர்கல்வி அமைப்புகள் பல்வேறு கல்வி துறை நிர்வாகங்கள் தேர்வு உள்ளிட்டவை சுருக்கெழுத்தில் வழங்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் அல்லது ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பேசும்போது இந்த Abbreviations - ஐ பயன்படுத்துவது வழக்கம்.

அப்போது நம்மில் பலருக்கு இது என்ன வார்த்தை, அதன் அர்த்தம் என்னவென்று புரியாத சூழல் ஏற்படும். எனவே, பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களாகிய நீங்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பயனுள்ள தகவல்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Also Read: TN Tamil Language Exam

  • ABC - Academic Bank of Credit - தரமதிப்பீட்டு கல்வி வங்கி
  • AI - Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
  • AC - Autonomous degree -granting College - பட்டம் வழங்கும் தன்னாட்சி கல்லூரி
  • AEC - Adult Education Center - வயதுவந்தோர் கல்வி மையம்
  • API - Application Programming Interface - பயன்முறை நிகழ்ச்சி திட்டமிடும் இடைமுகம்
  • AYUSH - Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy
  • B.Ed - Bachelor of Education - இளநிலை கல்வியியல்
  • BEO - Block Education Officer - வட்டார கல்வி அலுவலர்
  • BITE - Block Institute of Teacher Education - வட்டார ஆசிரியர் கல்வி நிறுவனம்
  • BoA - Board of Assessment - மதிப்பீட்டு வாரியம்
  • BoG - Board of Governors - ஆளுநர்கள் வாரியம்
  • BRC - Block Resources Center - வட்டார வள ஆதார மையம்
  • B.Voc - Bachelor of Vocational Education - இளநிலைச் செய் தொழிற்கல்வி
  • CABE - Central Advisory Board of Education - மைய கல்வி அறிவுரை வாாியம்
  • CBCS - Choice Based Credit System - விருப்பத்தெரிவு அடிப்படையிலான தரமதிப்பீட்டு அமைப்பு முறை
  • CBSE - Central Board of Secondary Education - மத்திய இடைநிலை கல்வி வாாியம்
  • CIET - Central Institute of Educational Technology - மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம்
  • CMP - Career Management and Progression - செய்பணி மேலாண்மை மற்றும் முன்னேற்றம்
  • CoA - Council of Architecture - கட்டிடகலை குழுமம்
National Education Policy abbreviation
  • CPD - Continuous Professional Development - தொடர் பணித்தொழில் வளர்ச்சி
  • CRC - Cluster Resources Center - கொத்தமைப்பு வள ஆதார மையம்
  • CWSN - Children With Special Needs - சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள்
  • DAE - Department of Atomic Energy - அணுசக்தி துறை
  • DBT - Department of Biotechnology - உயரித் தொழில்நுட்பத்துறை
  • DEO - District Education Officer - மாவட்ட கல்வி அலுவலா்
  • DEPwD - Department of Empowerment of Persons with Disabilities - இயலாமையுள்ளவர்களுக்கு அதிகாரமளிப்புத்துறை
  • DIET- District Institute Of Education and Training - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • DIKSHA - Digital Infrastructure for Knowledge Sharing - அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான எண்மிய உள்கட்டமைப்பு
  • DST - Department of Science and Technology - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
  • ECCE - Early Childhood Care and Education - முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வி
  • EEC - Eminent Expert Committee - மிகச்சிறந்த வல்லுநர் குழு
  • GCED - Global Citizenship Education - உலக குடியிரிமைக் கல்வி
  • GDP - Gross Domestic Product - முழுமொத்த உள்நாட்டு செய்பொருள்
  • GEC - General Education Council - பொது கல்வி குழுமம்
  • GER - Gross Enrollment Ratio - முழமொத்த பதிவு சேர்க்கை வீதம்
  • GFR - General Financial Rule - பொது நிதி விதி
  • HECI - Higher Education Commission of India - இந்திய உயர்கல்வி ஆணையம்
  • HEGC - Higher Education Grants Council - உயர்கல்வி நிதிநல்கைக் குழுமம்
  • HEI - Higher Education Institutions - உயர்கல்வி நிறுவனங்கள்
  • ICAR - Indian Council of Agriculture Research - இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்
  • ICHR - Indian Council of Historical Research - இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுமம்
  • ICMR - Indian Council of Medical Research - இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம்
  • ICT - Information and Communication Technology - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
  • IDP - Institutional Development Plan - நிறுவனம்சார் வளர்ச்சி திட்டம்
  • IGNOU - Indira Gandhi National Open University - இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்
  • IIM - Indian Insinuate of Management - இந்திய மேலாண்மை நிறுவனம்
  • IIT - Indian Institute of Technology - இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
  • IITI - Indian Institute of Translation and Interpretation - இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள்விளக்க நிறுவனம்
  • ISL - Indian Sign Language - இந்திய சைகை மொழி
  • ITI - Industrial Training Institute - தொழிற்பயிற்சி நிறுவனம்
  • M.Ed - Master of Education - முதுநிலை கல்வியியல்
  • MBBS - Bachelor of Medicine and Bachelor of Surgery - இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை மருத்துவம்
  • MERU - Multidisciplinary Education and Research University - பல்வகை பாடப்பிரிவு கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்
  • MHFW - Ministry of Health and Family Welfare - உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  • MHRD - Ministry of Human Resource Development - மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • MoE - Ministry of Education - கல்வி அமைச்சகம்
  • MOOC - Massive Open Online Course - பெரும்படியான திறந்தநிலை இணையவழி பயிற்சி
  • MOU -Memorandum of Understanding - புாிந்துணர்வு ஒப்பந்தம்
  • M.Phil - Master of Philosophy - ஆய்வியில் நிறைஞர்
  • MWCD - Ministery of Women and Child Development - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • NAC - National Accreditation Council - தேசிய சான்றிழிப்பு குழுமம்
  • NAS - National Achievement Survey - தேசிய அருஞ்செயல் (சாதனை) அளவை
  • NCC -National Cadet Corps - தேசிய மாணவர் படை
  • NCERT - National Council of Education Research and Training - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்
  • NCFSE - National Curriculum Framework for School Education - தேசிய பள்ளி கல்வி பாடத்திட்டம் சட்டகம்
  • NCFTE - National Curriculum Framework for Teacher Education - தேசிய ஆசிரியர் கல்விப்பாடத்திட்டம் சட்டகம்
  • NCIVE - National Committee for the Integration of Vocational Education - தேசிய செய்தொழிற்கல்வி ஒருங்கிணைப்புக்குழு
  • NCPFECCE - National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - முன்- குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் முறை சட்டகம்
  • NCTE - National Council for Teacher Education - தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்
  • NCVET - National Council for Vocational Education and Training - தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமம்
  • NETF - National Educational Technology Forum - தேசிய கல்வி தொழில்நுட்ப மாமன்றம்
  • NGO - Non -Government Organisation - அரசு சாராத நிறுவனம்
  • NHEQF - National Higher Education Qualifications Framework - தேசிய உயர்கல்வி தகுதிநிலைச் சட்டகம்
  • NHERC - National Higher Education Regulatory Council - தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று குழுமம்
  • NIOS -National Institute of Open Schooling - தேசிய திறந்தநிலை பள்ளிகல்வி நிறுவனம்
  • NIT -National Institute of Technology - தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
  • NITI - National Institution for Transforming India - இந்தியாவை மாற்றியமைப்பதற்கான நிறுவனம்
  • NPE - National Policy on Education - தேசிய கல்வி கொள்கை
  • NPST - National Professional Standards for Teachers - தேசிய ஆசிரியர் பணித்தொழில் அளவைதரங்கள்
  • NRF - National Research Foundation - தேசிய ஆராய்ச்சி நிதி நிறுவனம்
  • NSQF - National Skills Qualifications Framework - தேசிய செயல்திறகு தகுதிநிலை சட்டகம்
  • NSSO - National Sample Survey Office - தேசிய வகைமாதிரி அளவை அலுவலகம்
  • NTA - National Testing Agency - தேசிய சோதனை முகமை
  • ODL - Open Distance Learning - திறந்தநிலை மற்றும் தொலைநிலை கற்றல்
  • PARAKH - Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic development - செயல்நிகழ்வு மதிப்பீடுஇ, மறு ஆய்வு மற்றும் முழுநிறைவு வளா்ச்சிக்கான அறிவுப் பகுப்பாய்வு
  • PCI - Pharmacy Council of India - இந்திய மருந்தியல் குழுமம்
  • PFMS - Public Financial Management System - பொது நிதி மேலாண்மை அமைப்பு முறை
  • Ph.D - Doctor of Philosophy - முனைவர் பட்டம்
  • PSSB - Professional Standard Setting Body - பணித்தொழில் அளவைத்தர அமைப்புக்குழு
  • PTR - Public Teacher Ratio - ஆசிரியர் - மாணவர் வீதம்
  • R&I - Research and Innovation - ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்
  • RCH - Rehabilitation Council of India - இந்திய மறுவாழ்வு மையம்
  • RPWD - Rights of Persons with Disabilities - இயலாமையுள்ளவர்களிள் உரிமை
  • SAS - State Achievement Survey - மாநில அருஞ்செயல் (சாதனை) அளவை
  • SCDP - School Complex / Cluster Development Plans - பள்ளி வளாகம், கொத்தமைப்பு வளர்ச்சி திட்டங்கள்
  • SCERT - State Council of Educational Research and Training - மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம்
  • SCF - State Curricular Framework - மாநில பாடதிட்டக சட்டகம்
  • SCMC - School Complex Management Committee - பள்ளி வளாக மேலாண்மை குழு
  • SDG - Sustainable Development Goal - நீடித்த வளர்த்த இலட்சியம்
  • SDP - School Development Plan - பள்ளி வளர்ச்சி திட்டம்
  • SEDG - Social Economically Disadvantaged Group - சமூக பொருளாதார நிலையில் நலக்கேடுற்ற குழு
  • SEG - Special Education Zone - சிறப்பு கல்வி மண்டலம்
  • SIOS - State Institutes of Open Schooling - மாநில திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனங்கள்
  • SMC - School Management Committee - பள்ளி மேலாண்மை குழு
  • SQAAF - School Quality Assessment and Accreditation Framework - பள்ளித் தர மதிப்பீடு மற்றும் தரச்சான்றிப்பு சட்டகம்
  • SSSA - State School Standards Authority - மாநில பள்ளி அளவைத்தர அதிகார அமைப்பு
  • STEM - Science Technology, Engineering and Mathematics
  • SWAYAM - Study Webs of Active Learning for Young Aspiring Minds - இளம் ஆர்வ மனங்களுக்கு முனைப்பு கற்றல் படிப்பு இணையதளம்
  • TEI - Teacher Education Institution - ஆசிரியர் கல்வி நிறுவனம்
  • TET - Teacher Eligibility Test - ஆசிரியர் தகுதித்தேர்வு
  • U - DISE - Unified District Information System for Education - ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்புமுறை
  • UGC - University Grants Commision - பல்கலைக்கழகத்தின் நிதிநல்கை ஆணையம்
  • VCI - Veterinary Council of India
End....