தேசிய வேலை வாய்ப்பு பணி என்பதை தேசிய தொழில் நெறி பணி (National Career Service) என மாற்றி வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அகில இந்திய அளவில் தொழில்நெறி ஆலோசனைகள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படத்தித்தரவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அகில இந்திய அளவில் தங்களது வேலைவாய்ப்பிற்காக, பதிவு செய்து பயன்பெறவும் National Career Service இணையதளம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் வேலையளிப்பவர் (Employer), வேலைநாடுநர்கள் (employee), உள்ளூர் சேவை (Local Service Providers), திறன் வளர்ப்போர் (Skill Providers), தொழில்நெறி வழிகாட்டு நிலையங்கள் (Career Centers), ஆலோசகர்கள் (Counsellors), ஆள்சேர்ப்பு நிலையங்கள் (Placement Organization) ஆகியோர் தங்களை பதிவு செய்து கொள்ள இயலும். இதன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பவர் வேலைநாடுநர்கள் பற்றி அறியவும், வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் பற்றி அறியவும், வேலையளிக்கும் நிறுவனங்கள் காலியிடம் பற்றிய தகவல்களை வேலைநாடுநர்கள் அறியவும் இவ்விணையதளம் உதவுகிறது. இதுதவிர்த்து Carpenter, Plumber, Electrician, A/C Mechanic, Motor Mechanic போன்ற உள்ளூர் சேவையளிப்பவர் பதிவு செய்யவும் இச்சேவை பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ளவும் இந்த இணையதளம் பாலமாக செயல்படுகிறது. தொழில்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட திறன்பயிற்சி அளிப்போர் பதிவு செய்யவும் அவ்விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் இவ்விணையதளம் வழிவகை செய்கிறது. இதுதவிர்த்து உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கும் அரசு மற்றும் தனியார் தொழில்நெறி வழிகாட்டு நிலையங்களின் விவரங்கள் பற்றி அறியவும் உதவுகிறது. வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை அறிந்து அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் ஆலோசனைகள் அளிக்கவும், வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மற்றும் அரசு ஆள்சேர்ப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை இந்த இணையதளம் மூலம் அறியலாம்.