Namakkal latest education news | தலைமை ஆசிரியரை திட்டிய மாவட்ட ஆட்சியர்
Namakkal latest education news
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தலைமை ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் திட்டியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள முத்துக்காளிப்பட்டி அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, பள்ளிகளில் ஏன் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என கடிந்துகொண்டார். மேலும் அவர், பணக்கார குழந்தைகள் குறித்து நாம் கவலை கொள்ள ேதவையில்லை, ஏழை, எளிய குழந்தைகள் பள்ளியில் இன்னும் சேராமல் உள்ளனரா என அவர் கேள்வி கேட்டார்.
மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகாிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தலைமை ஆசிரியரை அறிவுறுத்திவிட்டு, அங்கிருந்து சென்றார்.