நம் பள்ளி நம் பெருமை அழைப்பிதழ் அப்படியே...
வணக்கம்!நம் ஊரில் உங்கள் பிள்ளை பயிலும் அரசு பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம்இது உங்கள் பள்ளி. நாம் இணைந்துதான் பள்ளியை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் பெற்றோராகிய உங்கள் பங்கு இருப்பது அவசியம். உங்களுடைய சிறப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவே பள்ளி மேலாண்மை குழுக்கள் உள்ளன.
- பள்ளியின் சூழல் மேம்படுத்துவதற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
- அங்கே மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
- தரமான சுவையான மதிய உணவை உத்தரவாதப்படுத்த என்ன செய்யலாம்?
- பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எவ்வாறு பங்களிக்கலாம்?
- தரமான கல்வி அவர்களுக்கு கிடைக்கும் சூழலை அவர்களுக்கு எவ்வாறு மேம்படுத்தி தருவது?
- பாட புத்தகம் தாண்டி அவர்களுடைய இதர திறமைகளை வெளிப்படுத்த வாயப்பளிப்பதில் நம்முடைய பங்கு இருக்கலாமா?
-
இப்படி பல கேள்விகள் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கக்கூடும். இவற்றுக்கான விடையை நீங்கள் அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் பள்ளி மேலாண்மை குழுக்களை உங்கள் பங்கேற்புடன் அரசு மறுகட்டமைப்பு செய்ய உள்ளது.
நம் பள்ளி நம் பெருமை - பள்ளி மேலாண்மை குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு.
- குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- அப்பள்ளியில் பயிலும் மாற்று திறனாளி குழந்தைகளின் பெற்றோர், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவரே துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
- தலைமை ஆசிரியர் குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக இருப்பார்.
- ஆசிரியா் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.
- எஸ்.சி, எஸ்.டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். (12 – உறுப்பினர்களில் பெண்கள் 7 பேர் இருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது)
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவில் இருப்பார்பள். (அவர்களில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது)
- கல்வி ஆர்வலர் அல்லது புரவலர் அல்லது அரசு சாரா அமைப்பினர் அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர் இவர்களில் யாரோனும் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.
- சுய உதவிக்குழுவில் இருக்கும் பெற்றோர் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை மாற்றி அமைக்கப்படும்.
- பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்கள் பங்களிப்போடு, பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவில் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள்.
- எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து நம் பிள்ளைகள் பயிலும் பள்ளியை கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி தமது பள்ளியாக மாற்றுவோம்.
அனைவரும் வாருங்கள்பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம்அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம்...