You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Naan Mudhalvan Short Film Competition | நான் முதல்வன் குறும்படம் போட்டி

TN CM Latest News in Tamil

Naan Mudhalvan Short Film Competition | நான் முதல்வன் குறும்படம் போட்டி

Naan Mudhalvan Short Film Competition

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே நான் முதல்வன் திட்டம் ஆகும். ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களிகன் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக குறும்பட திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

Read Also: பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை

நான் முதல்வன் குறும்படம் தலைப்புகள்

1)பள்ளி கல்வியில் சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம். 2)பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்ைறய சமுதாயத்திற்கு உதவும் 3) தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல் 4) திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது, 5) டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள் 6) நடைமுறை திறன்பயிற்சிகளின் முக்கியத்துவம் (தொழில்கல்வி).

நான் முதல்வன் குறும்படம் நேரம் எவ்வளவு?

ஆறுதலைப்பின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.

நான் முதல்வன் குறும்படம் பாிசுத்தொகை

முதல் பரிசு ரூ.50,000, இரண்டம் பரிசு ரூ 25,000 மற்றும் மூன்றாம் பரிசு 10,000 தேர்வு செய்யப்படும் குறும்படத்திற்கு வழங்கப்படும்.

நான் முதல்வன் புகைப்படம் போட்டி தலைப்பு

தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரிய திறன்கள்

உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி சாள் 1.2.2023. பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகையிடுவதன் மூலம் பங்கேற்கலாம் மற்றும் socialmedia@naanmudhalvan.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம்.

வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு நான் முதல்ன் திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் மூன்று மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதள முகவரியை காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.