You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆன்லைன் கல்வியால் பயனில்லை - பல்கலை ஆய்வில் உறுதியானது

||||

ஆன்லைன் கல்வி கொடிய கொரோனாவால் கடந்த ஏழு மாதமாக பள்ளிகள் பூட்டிய நிலையில் காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி எனும் ஆயுதத்தை பள்ளி மாணவர்கள் வீச தொடங்கினர். கல்வியாளர்கள் ஆன்லைன் கல்வி மாணவர்கள் இடையே ஏற்ற தாழ்வு ஏற்படுத்தும் எனவும், கல்வி கட்டணம் வசூலிப்பதற்காகவே ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாகவும், இந்த கல்வியால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் பெற்றோர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறையும் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள் அனுப்பியும், வாட்ஸப் மற்றும் தொலைப்பேசியில் மாணவர்களுடன் பேசியும் அவர்கள் கல்வியை உறுதி செய்ய வேண்டும் எனவும், பிற வகுப்பு மாணவர்கள் தினமும் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. ஆனால், எந்த அளவிற்கு இந்த மாணவர்கள் பயனுடைந்துள்ளனர் என்பது குறித்து தரவுகள் ஏதும் இல்லை.

இந்த நிலையில், கர்நாடகவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆன்லைன் கல்வி குறித்து ஒரு ஆய்வு செய்து, தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் சாரம்சம் சில:

  • இந்த பல்கலைக்கழகம் ஐந்து மாநிலங்களில் 1,522 பள்ளிகளில் உள்ள 80 ஆயிரம் மாணவர்கள், பெற்றோரிடம் ஆன்லைன் கல்வி முறை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.
  • இந்த ஆய்வில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இல்லை எனவும், பயனற்றது எனவும் ஆனித்தனமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
  • பெரும்பாலானோர், அரசு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து, பள்ளி திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
  • 80 சதவீத ஆசிரியர்கள் ஆன்லைன் கல்வி, வகுப்பறை கல்வியை ஈடு செய்யவில்லை எனவும், வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர் மாணவர் இடையே கலந்துரையாடல், கண்காணித்தல் உள்ளிட்ட விஷயங்கள் ஏதும் இல்லை எனவும், மாணவர்களுக்கு நேரடி கல்வி சென்று சேரவில்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • 70 சதவீத பெற்றோர் ஆன்லைன் கல்வியால் எந்த பயனும் அளிக்கவில்லை கருத்து தெரிவித்துள்ளனர்.
  • இணையதள வசதி, நவீன கைப்பேசி இல்லாததால் 60 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் கிடைக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • 90 சதவீத மாற்றுதிறன் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது ஆசிரியர்கள் ஆய்வில் கூறியிள்ளனர்.
  • 90 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.