Moovalur Ramamirtham Ammaiyar Scheme | மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்
Moovalur Ramamirtham Ammaiyar Scheme
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு என புதிய மறு சீரமைக்கப்பட்ட வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டைய படிப்பு, தொழில் படிப்பு ஆகியவற்றின் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
Read Also: Penkalvi scheme
இந்நிலையில் திட்டத்திற்கு புதிய மறு சீரமைக்கப்பட்ட வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரை கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.