தேசிய நுழைவு தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ அடுத்த மாதம் நடக்கிறது. இந்த நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (National Testing Agency) 'நேஷனல் டெஸ்ட் அபியாஸ்' எனும் செயலியை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
https://play.google.com/store/apps/details?id=com.abhyas.nta.com இந்த செயலியின் நோக்கம் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த செயலியில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வினாத்தாளை பயன்படுத்தி, தேர்வர்கள் மூன்று மணி நேரம் பயன்படுத்தி, சோதனை தேர்வு எழுத முடியும். தேர்வு நிறைவடைந்த பின், தவறை சுட்டிகாட்டி, ஆராய்ந்து அதற்கான சரியான விடையை மாணவர்களுக்கு தெரிவிக்கும். இதன்மூலம் மாணவர்கள் எவ்வாறு தங்களது படிப்பை மேம்படுத்த முடியும் என அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் உள்ளது. 18.89 MB இட அளவுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நீட் பயற்சி மாணவர்கள் பெற முடியாத காரணத்தால், இந்த செயலியை வடிவமைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.