MAY 1 Teacher Wish - மே தினம் ஆசிரியரின் அழகான கவிதை
MAY 1 Teacher Wish
தொழிலாளர் தினம்-மே1-2023
எதுகை மோனை தேடும் கவிஞர்போல
எதிர்காலத்தை தேடும் இளைஞர் கூட்டம்!
நாளை நமதென்று நம்பிக்கை ஒளிகூட்டும்!
சோலைப் பூக்களாய் சொல்லி வழிகாட்டும்!
பாலை பூக்குமென்று பாதை மெருகூட்டும்!
வேலை வேதமென்று வேர்வைத் துளிகூறும்!
வெற்றி அடையாமல் உறங்காது களிகூறும்!
தேவை எதுவென்று தெரிந்தே வினையாடும்!
சேவை இதுவென்று செய்தே விளையாடும்!
மே"வை முதற்கொண்டு
மேலும் நடைபோடும்!
#கவிஞர் ந.டில்லிபாபு- இடைநிலை ஆசிரியர்- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- தானன்குப்பம்-ஒலக்கூர் ஒன்றியம்-திண்டிவனம் கல்வி மாவட்டம்-விழுப்புரம்- 8610826676..