Mathur Government Higher Secondary School Tiruttani | மத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மர்மநபர்கள் அட்டூழியம்
Mathur Government Higher Secondary School Tiruttani
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுமார் 400 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். வழக்கம்போல் பள்ளி மாணவர்கள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அப்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு போடப்பட்ட கதவு பூட்டின் மீது, மர்மநபர்கள் சிலா் மனித கழிவை (மலம்) பூசிவிட்டு சென்றுள்ளததை கண்டு, மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனா், தகவல் அறிந்த பெற்றோரும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பெற்றோர் கூறும்போது, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய உள்கட்டமைப்பு வசதி பள்ளிக்கு இல்லை. இதை பயன்படுத்தி, மா்மநபர்கள் பள்ளி வளாகத்தில் நுழைந்து, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் முன்பு, அவர்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், மனித கழிவை பூட்டின் மீது பூசிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, வட்டாட்சியர், கல்வி அலுவலர்கள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதேபான்று, கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள செலக்கரிச்சல் நடுநிலைப்பள்ளியில் மர்மநபர்கள் சிலர் பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக மாற்றியுள்ளதாகவும், மேலும், மது பாட்டில்களை வகுப்பு முன்பு வைத்து அட்டகாசம் செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.