You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பொறியியல் படிப்புகள் கணிதம் கட்டாயம் இல்லை - ஏஐசிடிஇ அறிவிப்பு

Coimbatore HM Sexual Harassment

பொறியியல் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளுக்கு இனி கணிதம் கட்டாயம் இல்லை என ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வரை பொறயியில் படிப்புகளில் நேர பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற கட் ஆப் மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு, பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சோ்்க்கை ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும்.

பொறியியல் படிப்புகள்

இந்தநிலையில் இந்தியவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பாடங்களிலும் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையே புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான, திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்டது. அதன்படி கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு ெபாறியியல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கட்டிட கலை, பேஷன் டெக்னாலஜி, வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்பதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொறயியில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு புதிய கல்லூாிகள் தொடங்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.