You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
முருக கடவுள் கோயில் கொண்டு திருவருள்புரியும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருசெந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகிய திருத்தலங்களுக்கெல்லாம் வரிசைப்படி சென்று வழிபட்டு வந்தவர்கள் ஏழாவது படை வீடாக எண்ணி இங்கே எழுந்தருளியிருக்கும் அழகு முருகனின் சுடர் முகத்தை தரிசிப்பதற்கு மிகுதியான ஆர்வத்தோடு வருகின்றனர்.
மருதமலை கோயில் எந்த மாவட்டத்தில் உள்ளது
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகச் சிறப்பு பெற்றிருக்கும் மருதமலையானது கோவையில் இருந்து வடமேற்கு திசையில் 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலை இது. இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசல கடவுளின் திருக்கோயில் ஜொலிக்கிறது.வெள்ளியங்கிரி மலையைச் சிவபெருமானின் உருவமாகவும், நீலிமலையை உமையம்மையின் உருவமாகவும், இந்த மருதமலையை முருகனின் உருவாகவும் ஆக மூன்று மலைகளையும் சேர்ந்து சோமாஸ்கந்தமூர்த்தி வடிவமாக பேரூர்புராணத்தில் கச்சியப்ப முதலியார் முனிவர் குறித்துள்ளது கவனத்தில் பதிகிறது.
மருதமலை படிகள் எத்தனை
மருதமைல அடிவாரத்தில் இருந்து செல்ல வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து மேல் முருகன் கோயில் செல்ல 837 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மலைப்பாதையும் உள்ளது. காட்டு விலங்குகள் நடமாட்டம் காரணமாக, அவ்வப்போது மலைப்பாதையில் செல்ல பக்தர்களுக்கு கோயில் நிா்வாகம் தடைவிதிக்கப்படுகிறது. அதேசமயம், கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. விஷேசமான நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பயண கட்டணமாக தலா ஒருவருக்கு ரூ 10 வசூலிக்கப்பட்டு, பயணசீட்டு வழங்கப்படும்.மலைப்பாதையில், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் (கார் மட்டும்) அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. பார்க்கிங் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும்.
மருதமலை தான்தோன்றி விநாயகர்
மலைப்பாதை தவிர, படிக்கட்டு பயணம் தொடங்கும்போது, அடிவாரத்தை கடந்து மேலே சற்றுத்தூாரம் சென்றதும், ‘தான்தோன்றி விநாயகர்‘ காட்சியளிக்கிறார். உளிபடாத இவரது உன்னததோற்றம் உள்ளத்தை உதயக்கதிராக தீண்டுகிறது. தனிக்கோயில் இருந்து விநாயகர் அருள் பாலிப்பது சிறப்பு. அடுத்து சற்று தூரம் சென்றதுமே இடும்பன்கோயில் உள்ளது. பெரிய பாறையின் முன்புறம் காவடி தூக்கிய கோலத்தில் உள்ள இடும்பன் காவலனாக விளங்குவது நம் கவனத்தில் நிற்கிறது.
மூலிகை நிறைந்த மலை
இடையில் ஆங்காங்கே இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. சிறிது நேரத்திலயே கோயிலை அடைந்துவிடலாம். படிகளில் நடந்துசெல்லும்போது, வடக்கிலும், தெற்கிலுமாக வியாபித்திருக்கும் மலையின் மூலிகைத் தாவரங்களின் மணம் காற்றில் வந்து களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும். இரு மலைகளின் மத்தியில் பரந்த மைதான வெளியில் இதயம்போல மருதாசல மூர்த்தியின் திருக்கோயில் இடம்பெற்றுள்ளது. நெடுங்காலமாகத் தென்புறத்தில் மட்டுமே பக்தா்கள் செல்வதற்கு படிகள் இருந்தன. அவ்வழியே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் ராஜகோபுரத்தின் கும்பாபிஷேக விழாவையொட்டி கோயிலுக்கு நேர் கொடிகம்பத்தின் கிழபுறமிருந்தே படிகள் மிகுந்த வசதியோடு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்தல விருட்சத்தின் மகிமை
கோயிலின் வலதுபுறம் தல விருட்சமாகிய மருதமரம் குளுமை தருகிறது. மருதமலை என இந்த மலைக்குப் பெயர் உண்டானதற்கான காரணங்களில் இந்த மரமுன் ஒன்றாக கருதப்படுகிறது.
மருதமலை மருதசால மூர்த்தி
முருக கடவுளின் மீது அளவில்லாத பக்தி கொண்ட முனிவர் ஒருவா் கானகமாய் அடா்ந்து கிடந்த இங்கே நெடிய தவத்தை மேற்கொண்டிருந்தார். அவருக்கு உண்டான அளவில்லாத தாகமும், அசதியும் அவருக்கு அவரை கீேழ தள்ளி மயக்கநிலைக்கு ஆளாக்கிவிட்டன. மரத்தின் கீழே அவர் உருண்டு கிடந்த பொழுது அந்தமரத்தின் அடிப்பகுதியிலிருந்து நீர் ஊற்று ஒன்று மேல்நோக்கி பொங்கி எழுந்து அவரை குளிர்வித்தது. மயக்கத்தை தீர்த்தது. தாகத்தை தணித்தது. அந்த மரம் மருதமரம் என்பதாலும், அதிலிருந்து ஜலம் பொங்கி வந்ததாலும் மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தத்தோடு பாடிதுதித்தார். இதனாலேேய இவ்விடம் மருதாஜலம் என ஆயிற்று. அந்த சொல்லே நாளடைவில் மருதாசலம் என மருவப்பெற்று நிலைபேறும் ஆகிவிட்டுள்ளது. இந்த இடத்தை மையமாகி கொண்டு கோயில் கொண்டுவிட்ட இறைவனும் மருதசால மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
மருதமலை கல்வெட்டு சான்று
எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பு திருமுருகன் பூண்டிக்கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. காலவரலாற்றை கருத்தில் கொள்வதற்கு இது துணை செய்வதாக உள்ளது. பேரூர்த்தல புராணத்தில் அபயப்படலம், மருதவரைபடலம், ஆகியவற்றிலும் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. கொங்குமக்கள் இந்த மலையின் பெயரை தமக்கு இட்டுக்கொள்ளும் வழக்கமானது 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. இவைகளின் மூலம் இக்கோயிலின் காலம் நமது கருத்தில் ஊன்றுகிறது. தமிழகத்தின் அனைத்து முருகன் கோயில்களுக்கும் பயணம் மேற்கொண்ட அருணகிரிநாதர் இந்த மருதமலைக்கும் வந்திருப்பார் என்ற எண்ணத் தோன்றுகிறது. திருப்புகழில் வரும் திரிபுரமதனை ஒரு நொடியதனில் என்னும் பாடல் இந்த முருகனுக்கு பாடியதாக கருதலாம். கோயிலின் முன்மண்டபத்தில் தென்புற, வடப்புற சுவர்களில் முருகன் கடவுளின் திருக்கோலங்கள் எழிலுற விளங்குகின்றன. கருவறையும், அர்த்த மண்டபமும் சிறப்புறத் துலங்குகின்றன. நன்கு விஸ்தீரணமாக வசந்த மண்டபம் அண்மையில் 2012ல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளேயிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு கையில் தண்டாயுதம் கொண்டவராக இறைவன் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு அபிஷேகப் பூஜையின்போதும் ஒவ்வொரு பரவசத்தை பக்தர்களின் உள்ளங்களில் ஏற்படுத்துவதாக இந்த அருட்காட்சி விளங்குகிறது.
மருதமலை பாம்பாட்டி சித்தர் கோயில்
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு ஆதியில் இறைவன் குடிகொண்ட கோயிலுக்கு செல்லும் வழி உள்ளது. இந்த கோயிலும் முன் பகுதியையும் விரிவுப்படுத்தி பெரிய மண்டபமாக அண்மையில் அமைத்துள்ளனர். ஆதியில் இறைவன் அமர்ந்த இடமும் நன்கு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது. அந்த கோயிலின் மேற்கு பக்கத்தில் பாம்பாட்டி சித்தர் குகைக்கு செல்லும் பாதை உள்ளது. படிக்கட்டு வசதிகளோடு இயற்கை சூழலில் அமைதி கொலுவிருக்கும் அந்த இடத்திற்கு சென்று வர எல்லோருடைய மனமே விரும்பக்கூடியதாக இருக்கிறது. மருதமலை முருகனை வழிபட்டு, வந்த அந்த சித்தர், தவம் மேற்கொண்ட குகையாக இந்த இடம் கருதப்படுகிறது. இங்கிருந்து முருகனின் கருவறைக்கு செல்ல சுரங்க வழி இருந்ததாகவும், பாம்பாட்டி சித்தர் அந்த வழியைப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. கொங்கு சித்தர்களில் முக்கியமானவராகவும், 18 சித்தர்களில் ஒருவராகவும் விளங்கும் இந்தச் சித்தர் முருகப்பெருமானின் அனுக்கிரகம் பெற்று இங்கேயே ஐக்கியமாகி விட்டவர்.
கடவுள் தரும் மலர்
திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், இதரப் பொதுகாரியங்களுக்கும், மருதமலை ஆண்டவரிடம் பூ கேட்கும் வழக்கம், சுற்றுவட்டார மக்களுக்கு நெடுங்காலங்மாகவே உண்டு. நாளடைவில் மிகப்பிரசித்தி பெற்று வருகிற இந்த கோயிலில் வருடம் முழுவதுமே பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. தினசரி பூஜைகளும், முருகக் கடவுளுக்கு உகந்த நாட்களில் எல்லாம் சிறப்பு பூைஜகளும், சித்திரைபிறப்பு, கந்தர்சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம், போன்ற தருணங்களில் நாள் முழுக்கவும் மணம் கமிழும். தைப்பூசத்தின்போது, நடைபெறும் தேரோட்டமும் பெருமளவு இதயங்களை இந்தத் திருத்தலத்திற்கு காந்தமென இழுக்கிற விழாவாக திகழ்கிறது. ஒவ்வொரு கிருத்திகை, பிரதோஷம் சஷ்டியின்போது, மிகுதியான கூட்டம் காணப்படும்.
மருதமலை கோயில் முகவரி
மருதமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் சாைல, மருதமலை அடிவாரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு 641 046.