திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக்தித்ல இண்டஸ்ட்ரியல் லா - தேர்வின் கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. இளம் வணிகவியல் துறையில் இண்டஸ்ட்டிரியல் லா பாடத்திற்கான தேர்வு நேற்று நடக்க இருந்தது. நேற்று காலை 99 மையங்களில் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு துவங்குவதற்கு சற்று முன்பாக தரப்பட்ட வினாத்தாள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டன. வினாத்தாள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், அதனால் நேற்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யபட்டு வினாத்தாள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே தேர்வு நேற்று நடக்கவில்லை. மே 29ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ள நிலையில், கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் அச்சிடப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31 நடக்கும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.