கோவை காளப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தைக் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சிஎஸ்ஆர் செயல்பாடுகள் மூலமாக பல தன்னார்வ அமைப்புகள் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றன. மேலும் கூடுதலாக உதவிகள் கிடைக்க, அதற்கென்று ஒரு தனியாக செயலி உருவாக்கப்படும். இதனால் இன்னும் முறையாக, தேவைகேற்ப உதவிகள் பள்ளிக்கு கிடைக்கும், என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக அந்த பள்ளிக்கு சென்ற போது பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்ததாகவும், பின்னர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும். என்றும், இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகபடியான விழிப்புணர்வு இல்லை. பள்ளிகள் முழுமையாக திறந்த பிறகு அது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும். என்று அவர் தெரிவித்தார்.
பல இடங்களில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் மற்றும் உடனடியாக பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தொடந்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல் நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு அதுபோன்ற அறிவுப்புகள் பள்ளி கல்வி துறை சார்பாக வெளியிடப்பட்டு முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். என்றும் அவர் கூறினார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |