குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரம் நடந்தது.
அமைச்சர் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.பின், அவர் பேசியதாவது, குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு குறித்து, என்என்எஸ் மூலம் இதுவரை 1723 முகாம்களை நடத்தி உள்ளோம். அதன் வாயிலான 8,615 ஆசிரியர்களுக்கும், 86186 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். Read Also: அரசு பள்ளியில் அன்பில் மகேஸ் அதிரடிபாலியல் துன்புறுத்தல்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கு நடப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் வெளியாகும் பத்திரிகை செய்திகளை படித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே, யாரும் பயப்பட தேவை இல்லை.மேலும் அவர் கூறியதாவது, கருத்தரங்கில் பேசப்படும் கருத்துகள் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு நண்பனை போல இருந்து எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து விரைவில் குறும்படம் வெளியிடப்படும், என்றார்.