Magalir Urimai Thogai Thittam Latest News | மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்
Magalir Urimai Thogai Thittam Latest News
கலைஞா் மகளிர் உரிமை தொகை திட்டம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் மின்சார யூனிட் பயன்பாடும் ஒன்றாக இருப்பதால் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்குமா இல்லையா என்பதில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Read Also: மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் PDF Download
இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டு 2.33 கோடி மீட்டர் மின்சார பயன்பாட்டாளர்கள் உள்ள நிலையில், ஆண்டுக்கு 3600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 இலட்சமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் இது ஐந்து விழுக்காடு தான் என்றும், மற்றவர்கள் ஆண்டுக்கு 3500 யூனிட் வரை பயன்படுத்துவோர் பட்டியலில் வந்து விடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை தவிர்க்கும் நோக்கத்தில் மின் பயன்பாட்டை நிபந்தனையாக வைக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
News Source – Puthiyathalaimurai TV