Magalir Urimai Thogai Form PDF Download | Magalir Urimai Thogai Application PDF Download | மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் PDF Download
Magalir Urimai Thogai Form PDF Download
மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 13 கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், 4 ஆவணங்களையும் கட்டாயம் எடுத்து வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Magalir Urimai Thogai Form PDF Download - Click Here
Magalir Urimai Thogai Government Order PDF Download - Click Here
கேட்கப்பட்டுள்ள விவரங்கள்
விண்ணப்பப் படிவம் இருபக்கங்களை கொண்டுள்ளது. முகப்பு பக்கத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் பக்கத்தில் 10 கேள்விளும், அடுத்த பக்கத்தில் 3 கேள்விகளும் என மொத்தம் 13 கேள்விகளுக்கு விண்ணப்பதாரர்கள் பதில் தர வேண்டும்.
1.ஆதார் எண், 2, பெயர், 3,குடும்ப அட்டை எண், 4 திருமண நிலை (மணமாணவர், மணமாகாதாவர்), விவகாரத்து பெற்றவர், கைவிடப்பட்டவர், விதவை), 5 தொலைபேசி எண், 6 வசிக்கும் வீட்டின் தன்மை (சொந்த வீடு, வாடகை வீடு) மற்றும் வீட்டின் மின் இணைப்பு எண், 7, வங்கியின் பெயர், 8) வங்கி கிளையின் ெபயா், 9 வங்கி கிளையின் எண், 10, குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் (18 வயதிற்கு மேற்பட்ட குடும்பத்தினர், விவரங்களின் பெயர், வயது, தொழில், மாத வருமானம், வருமானவரி செலுத்துபவரா?) ஆகிய கேள்விகள் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது பக்கத்தில் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி 11, உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா (ஆம் எனில், அரசு திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டதா? (ஆம் எனில் 5 ஏக்கருக்கு சூமுலு் நன்செய் நிலம் உள்ளதா? அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் உள்ளதா?) 13, குடும்ப உறுப்பினர்கள் யாரிடமாவது காா், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
Read Also: மகளிர் உரிமை தொகை எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
கட்டுப்பாடுகள்
உரிமை தொகையை பெற ஆண்டு வருமானம் ரூ.2.5 வட்சத்துக்கு மேல் இல்லை என்பது உள்பட 11 கட்டுப்பாடுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இவை உறுதிமொழியாக விண்ணப்ப படிவத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளன. அவற்றை படித்து இறுதியில் கையொப்பமிட வேண்டும். மிகவும் எளிமையான முறையில் டிக் அடிக்கும் முறையில் கேள்விகள் தரப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் போன்ற ஒரு தகவல்களை மட்டுமே கையால் எழுத வேண்டியிருக்கும்.
விண்ணப்ப விநியோகம் அவற்றை பூர்த்தி செய்து அளிக்கும் நடைமுறை ஆகியன அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, விவரங்கள் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆவணங்கள் கட்டாயம்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கும்போது அவற்றுடன் 4 ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் பெயாில் எழுத்தில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, குடும்ப அட்ைட, மின்கட்டன ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.