மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமை பணிகளுக்கான முதனிலை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு UPSC prelims -2021-க்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க தெரிவு (Selection) தேர்வு வரும் 31ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 வரை நடக்கிறது. சேர விரும்புவர்கள் அங்கிகரீக்கப்பட்ட பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், நடக்கவிருக்கும் தெரிவு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும். இந்த தெரிவு தமிழ்நாடு இனசுழற்சி முறை (Communal Rotation) அடிப்படையில் நடக்கும்.
இது ஆறு மாத பயிற்சி. இந்த காலங்களில் இவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்படும்.
நுழைவு தேர்வில் வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றம், பொது திறன் அறிவு ஆகியவற்றில் இருந்து 100 மதிப்பெண் அடிப்படையில் கேள்விகள் (Objective Type) கேட்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை www.mkuniversity.co.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக முகவரிக்கு, ஜனவாி 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: 0452-2458231/98656-55180
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |