மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வெங்கட்பிரபு மகன் வைத்தீஸ்வரன் 17, பிளஸ் 2வில் வேளாண் படிப்பு வந்தார். அவர், ஆசிரியர்கள், பிற மாணவர்களுடன் விவசாய களப்பயிற்சிக்காக வாசிமலையான் கோயிலுக்கு சென்றார்.
வழியில் உள்ள வைத்தீஸ்வரன் தோட்டத்தில் கரும்பு நடவு செய்தது, அருகில் இருந்த கோழிப்பண்ணை ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். பின், சில மாணவர்கள் மட்டும் கிணற்றில் குளிக்கச் சென்றனர். இதில் வைத்தீஸ்வரன் கிணற்றில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு எழுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மாணவர்களை களப்பயணத்துக்கு அழைத்து சென்ற விவசாய பாட ஆசிரியர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்து முதன்ைம கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டார்.