You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிறை

Avinashi Government College

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்தவர் ஹெலின் ரோனிகா ஜேசுபெல், இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இப்பள்ளியில், ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்த பணியிடத்தில் நியமிக்கப்பட்டேன். என் நியமனத்தை அங்கீகரிக்க, பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது.

Read Also: முதன்மை கல்வி அலுவலருக்கு எதிராக போர்கொடி

பல காரணங்களை கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய, மாவட்டக் கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த நீதிமன்றம், 2023ல் என் நியமனத்தை அங்கீகரிக்கவும், பணி நியமன தேதியிலிருந்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி எல் விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2019ம் ஆண்டில் இருந்து ஒப்புதல் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 2024 ஆகஸ்ட் 1 முதல் ஒப்புதல் அளித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்; இது ஏற்புடையதல்ல.

அவர், நீதிமன்றத்தில் ஆஜராக, நோட்டீஸ் பிறப்பித்தும் ஆஜராகவில்லை; நீதிமன்ற உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு, ஒரு வாரம் சாதாரண சிறை தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, பிப்.26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.