இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று, கிட்டதட்ட 170 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நிலையில், இந்த பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இதற்கான காரணம் சுமார் 400 கோடி வரியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழகத்தில் பணிபுரியம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்காலிக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாமல் நிர்வாகம் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் ஆறுமாதமாக காலியாக உள்ளது. தற்போது பதிவாளர் ஏழுமலை மட்டும் நிர்வாகத்தை கவனித்து வரும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓராண்டு அவருக்கு பதவி காலம் இருக்கும் நிலையில், தற்போது இந்த முடிவு எடுத்திருப்பது பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அங்கு பணியாற்றும் பேராசிரியர் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இந்த பல்கலைக்கழகத்தை தமிழக அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். News source: Thanthi tv.