Madras University Distance Education Admission 2023 | சென்னை பல்கலைக்கழகம் தொலைத்தூர படிப்பு
Madras University Distance Education Admission 2023
தொலைத்தூர கல்வியில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெற ஜூலை 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.ஏ ஏழுமலை வெளியிட்ட அறிக்கை – சென்னையில் பல்கலையில் தொலைத்தூர கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சோ்க்கை விண்ணப்பப்பதிவு ஜூலை 5ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.