Madras University Admission 2023 | சென்னை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023
Madras University Admission 2023
சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை, முதுகலை பட்ட, பட்டயப்படிப்பு சேர விரும்புவோர் புதன்கிழமை (ஏப்.19) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் உள்ள 73 துறைகளின் கீழ் 93 முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் 25 பட்டயபடிப்புகள், 29 சான்றிதழ் படிப்புகளும் கற்று தரப்பட்டு வருகின்றன. இவற்றில் வரும் கல்வியாண்டுக்கான (2023-24) மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது
எனவே விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள்
www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். படிப்புகளின் விவரம், கல்வி கட்டணம், பாடத்திட்டம், உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மேற்கண்ட வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.