பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூலக திறப்பு விழாவிற்காக நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் வந்தார்.
அப்போது, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி மையங்களில் பணியாற்றும் சிறப்பாசிரியா்கள் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அவர்கள் பல வருடங்களாக மிக சொற்ப மாத ஊதியமான 5000 ரூபாய்க்கு பணியாற்றி வருவதாகவும், இதனால் அவர்கள் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் மாத ஊதியத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர, குழந்தைகளுக்கான புத்தகம் மற்றும் எழுத்துபயிற்சி நோட்டுகள் வழங்காததால் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கான சீருடை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் பெற்றோர்களின் கோரிக்கைைய முன்ைவத்துள்ளனர். இதுதவிர, அவர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி வலியுறுத்தி உள்ளனர்.