Also Read: முன் எழுத்து தமிழில் எழுத வேண்டும் – கல்வித்துறை உத்தரவு
.அதன்படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளதுபோல் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத / விதவை / விவாகரத்துபெற்ற மகள் ஆகியோருக்கு அவர்கள் 25 வயதைக் கடந்த பிறகும் குடும்ப ஓய்வூதியம் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, வழங்கப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது. (i) ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகள்களும் / விதவை / விவாகரத்தான மகள்களும் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். (ii) ஒரு குடும்பத்தில் 25 வயதிற்குக் குறைவான, குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடைய குழந்தைகள் அவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிக் காலம் முடிந்த பின்னரோ, மேலும் அக்குடும்பத்தில் வேறு மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள் இல்லாவிடில் மட்டுமே, 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத / விதவையான / விவாகரத்தான மகள்கள் வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவர். (iii) இத்தகைய 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகள்கள் மற்றும் விதவை / விவாகரத்தான மகள்கள், திருமணமோ / மறுமணமோ புரிந்தபின் அவர்களின் குடும்ப ஓய்வூதியம் அத்திருமணத்திற்கு பின் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனை உறுதிசெய்யும் பொருட்டு மேற்கூறிய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் """"மணம் / மறுமணம் புரியாமை"" சான்றிதழ் ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் வழங்க வேண்டும். (iv) 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத / விதவை / விவாகரத்தான மகள்களில் அவர்களின் வயதின் அடிப்படையில் மூத்தவருக்கு முதலில் வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ / இறக்க நேரிட்டால் மட்டுமே அடுத்த இளைய மகள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார். (v) திருமணமாகாத மகள்கள் / விதவை / விவாகரத்தான மகள்களின் மாத வருமானம் ரூ. 2550/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக வருமானச் சான்றிதழை ஆண்டுதோறும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 3. உரிய ஆவணங்களின் அடிப்படையில் மேலே உள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யும் இனங்களில் சென்னையைப் பொறுத்தவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரும் / அந்தந்த மாவட்டங்களில் உரிய மாவட்டக் கருவூல அலுவலர்களும் மேலே பத்தி இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொண்டு குடும்ப ஓய்வூதியத்தை ஒப்பளிப்பு செய்ய அரசு அதிகாரமளிக்கிறது. வங்கிகள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை மேற்கண்ட நடைமுறையைப் பின்பற்றி ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / மாவட்டக் கருவூல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பிவைக்கவும் அரசு ஆணையிடுகிறது. 4. இவ்வாணை வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். 5. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு தக்க திருத்தம் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் வாாிசுகள் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசாணை PDF