அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Learning Outcome In Tamil | கற்றல் விளைவுகள் என்றால் என்ன?

Learning Outcome In Tamil | கற்றல் விளைவுகள் என்றால் என்ன?

கற்றல் விளைவுகள் என்றால் என்ன?

கற்றல் விளைவுகள் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்களைப் பாடவாரியாக மற்றும் வகுப்பு வாரியாகக் குறிப்பிடாமல் தொடக்கநிலை மற்றும் உயர்தொடக்க நிலைகளில், குறிப்பிட்ட அந்த வகுப்புக்கு ஏற்ப அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் பெற வேண்டிய முக்கியமான பொதுத்திறன்களைத் தொகுத்துக் கூறுவதாகும்.

• கற்றல் விளைவுகள் விளக்கம்
• மாணவர்கள் கற்றல் விளைவுகள் பெறுவதில் பள்ளி மேலாண்மைக்குழுவின் பங்கு இதில் நாம் அறிந்துகொள்ள போகிறோம்.

Also Read: எப்படி பள்ளி தரங்கள் குறித்து அறிவது

கற்றல் விளைவு முறைகள்

  • தரக்கண்காணிப்புக் கருவிகள்
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் மதிப்பீடு
  • தொடர் மற்றும் முழுமையான மாநில அடைவு ஆய்வு
  • பள்ளிப் பரிமாற்றத்திட்டம்

கற்றல் விளைவு – விளக்கம்

குழந்தைகளின் மொழிப்பாடம் வாசிக்கும் திறன், எண்ணறிவு, கணிதத்திறன், பொதுஅறிவு மற்றும் வாழ்வியல் திறன் போன்றவற்றில் அவர்களின் வெளிப்பாடுகள் குறைந்து வருவது தற்போது மிகவும் கவலை அளிப்பதால் கற்றல் விளைவுகளை அனைவரையும் அடையச் செய்தல் மிகவும் இன்றியமையாதது.
• கற்றல் விளைவுகள், வகுப்பு வாரியாக வகுப்பறைச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை தர மதிப்பீடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.
• கலைத்திட்ட எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், கற்றல் விளைவுகளை ஆசிரியர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
• உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி கற்றல் செயல்பாடுகளைத் திட்டமிட்டு அனைத்து கற்போரின் கற்றல் தேவைக்கேற்ப, உள்ளடங்கிய வகுப்பில், பல்வேறு வகையான கற்றல் சூழ்நிலைகள் / வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
• வகுப்புவாரியாகக் தனித்தனியாகப் பார்க்காமல், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை இலக்காகக் கொண்டு முழுமையான கண்ணோட்டத்துடன், இதனைக் காணவேண்டும்.
• இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் சம அளவிலானத் திறன்களைப் பெறவேண்டும் என்ற நோக்கில் “”கற்றல் விளைவுகள்”” தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தரப்பட்டுள்ளன.
• ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் அனைத்து பாடங்களுக்கும் (மொழி, ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) மாணவர் வெளிப்படுத்தவேண்டிய கற்றல் திறன்கள் “”கற்றல் விளைவுகளில்”” கொடுக்கப்பட்டுள்ளன.
• பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இதைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் அனைவரும் இக்கற்றல் விளைவுகளை அடைய தமது பங்களிப்பை வழங்குதல் வேண்டும்.

Learning outcome in Tamil
Learning outcome in Tamil

கற்றல் விளைவுகள் பள்ளி மேலாண்மைக்குழு பங்கு

  1. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சமுதாயம் மற்றும் மாநில கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் கல்வியின் தரத்தினை உறுதிசெய்யும் பொறுப்பினை அளித்துள்ளது.
  2. பல்வேறு கலைத்திட்டப் பகுதிகளில், பல்வேறு கல்விப்பங்குதாரர்களுக்குப் பொறுப்புணர்வையும், கடமையுணர்வையும் அளித்துள்ளது.
  3. ஒவ்வொரு வகுப்பிற்குமான மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்), கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் கற்றல் விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பெற்றோர் / பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் சமுதாய உறுப்பினர்கள் போன்ற அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.
  4. ஒவ்வொரு பாடப்பொருளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்பொழுது அப்பாடத்திறன்கள் அவர்களை சென்றடையும் விதத்தில் செயல்பாடுகளையும், வாய்ப்புகளையும் உருவாக்குதல். ஒவ்வொரு வகுப்பு முடிவடைந்தவுடனும், எதிர்பார்த்த கற்றல் விளைவுகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை ஆசிரியர்களுடன் இணைந்து உறுதி செய்வது பள்ளி மேலாண்மைக்குழுவின் கடமையாகும்

கற்றல் விளைவுகள் முறைகள்

தொடக்கக் கல்வியின் வளர்ச்சிக்கானத் தேவைகளை அறிந்து அதற்குரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் பங்கு முக்கியமானது. பள்ளியின் தரம் என்பது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணருவதிலும், அத்திறன்களை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளை வழங்குவதிலும் தொடர்புடையது.

கற்றல் விளைவுகள் கருவிகள் மூலம் தரத்தினை உறுதி செய்தல்

குழந்தையின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதாரமாய் விளங்குவது தொடக்கக் கல்வியாகும். ஒருங்கிணைந்த கல்வி இயக்ககமானது, தொடக்கக் கல்வியின் தரத்தினை உறுதி செய்தும், கற்றல் நோக்கங்களை வரையறை செய்தும், கற்றல் புகற்பித்தலில் பல்வேறு உத்திகளைப் குத்தியும், மாணவர்களின் கற்றல் அடைவினை உறுதி செய்ய பல விதமான மதிப்பீட்டு முறைகளையும் கையாண்டு வருகிறது.

பள்ளியில் ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் வருகை மற்றும் அடைவு பள்ளி கண்காணிப்பு படிவம் மூலம் சேகரிக்கப்பட்டு குறுவளமையம், வட்டார வளமையம் மற்றும் மாவட்டத்திட்ட அலுவலக அளவில் தொகுத்தாராயப்படுகிறது. அடைவு நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, தகுந்த குறைதீர் கற்பித்தல் பாடவாரியாகவும், வகுப்பு வாாியாகவும், வழங்கப்பட்டு அவர்களின் அடைவு மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளி மதிப்பீடு (PA-Periodical Assessment)

மாணவர்களின் கற்றல் அடைவு நிலையைக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே அறிவது அவசியம். இதற்காக மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட காலஇடைவெளி மதிப்பீடு (Periodical Assesment) மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை பெற்றுள்ளனரா என அறிய உதவுகிறது. இம்மதிப்பீடு ஜூலை மற்றும் ஆகஸ்டில் முதல் கட்டமாகவும், பிப்ரவரி மற்றும் மார்ச்சில் இரண்டாம் கட்டமாகவும். அனைத்து பள்ளிகளிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படுகிறது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலம் ஒவ்வொரு மாணவனும் பாடக்கருத்துக்களை முழுமையாகப் புரிந்து கற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் கலை வண்ணங்கள், படைப்புகள், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் எழுதுதல் திறன்கள் போன்றவை மாணவர்களின் தன்னறி கோப்புகளில் (பதிவுப் பையுறை) வைத்து ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் பெற்றோர்கள், குழந்தைகளின் முன்னேற்றத்தை அறியலாம்.

மாநில அளவிலான அடைவு ஆய்வு

மாநில அளவிலான அடைவு ஆய்வு என்பது ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் திறன்களை (Competencies) பெற்றுள்ளனரா என்பதைச் சோதிக்கும் பொருட்டு நடத்தப்படும் ஆய்வு ஆகும். இத்தேர்வானது அரசு, நகராட்சி, நலத்துறை, உதவி பெறும் மற்றும் KGBV பள்ளிகளில் 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கும் நடத்தப்படுகிறது. மாநில அடைவு ஆய்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளைச் சரியாக அளவிடவும், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவும், தொடர்ச்சியான கற்றல் திறனை மதிப்பிடவும் உதவுகிறது.

பள்ளி பரிமாற்ற திட்டம் என்றால் என்ன

மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல் கற்றல் செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான வளங்களை வழங்குதல் (Educational Ïnputs). ஆசிரிய மாணவ நல்லுறவை வளர்த்தல் சுதந்திரமாக இடைவினையாற்ற ஊக்குவித்தல், குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணருதல், மாணவர்களிடையே காணப்படும் சமூக, ஒழுக்க நடத்தைகளை வளர்த்தல் தாம் படிக்கும் பள்ளியில் பெறும் அறிவையும் கற்றல் அனுபவங்களையும் பிற பள்ளி மாணவர்களுடன் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளுதல், அறிவுசார் விவாதங்களில் பங்குபெறுதல், மேலாண்மைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், கலாசார பண்புகளைப் பேணிப் பாதுகாத்தல்ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் ஆலோசனைப்படி தமிழகத்தில் 2016-17 கல்வி ஆண்டு முதல் ஆறு பள்ளி வேலை நாட்களில் தெரிவு செய்யப்பட்ட கிராமப்புற பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள் நகர்ப்புறங்களில் இயங்கும் பள்ளிகளில் 8ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு

• தரக் கண்காணிப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பெறுதல்.
• அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துதல்.
• குழந்தைகளின் தர மேம்பாட்டில் ஒத்துழைப்பு நல்குதல்.

Related Articles

2 COMMENTS

Comments are closed.

Latest Posts