அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023

கவுரவ விரிவுரையாளர் பனிவரன்முறை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு (நகல்>>>PDF)

உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (முந்தைய 14 உறுப்பு கல்லூரிகள் உள்பட) பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் 30.09.2019 அன்று பிஎச்டி, செட், ஸ்லெட், நெட், சிஎஸ்ஐஆர் கல்வி தகுதிகளுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவர்ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தெரிவித்தது..

இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும், உயர்கல்வித்துறை இந்த விவகாரத்தில் விதிகளை மீறி செயல்படுவதாக கூறி தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கவுர விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன் முறைப்படுத்துவதற்கான சான்றிதழ் சாரிபார்ப்பிற்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்க செய்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 4.10.2019 அன்று வெளியிட்டது.

தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நான் அதற்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், நியமன நடைமுறைகள் முறையாக நடக்கவில்லை. அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை பணியாற்றுவோரை பணிவரன் முறை செய்திடும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறி, உதவி பேராசிரியர்களாக நியமிக்கின்றனர். எனவே, இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும், இவ்வாறு அவா் மனுவில் கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுவோரை பணி வரன் முறை செய்திட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து, மனு மீதான விசாரணை தள்ளி வைத்தனர்.

Related Articles

Latest Posts