உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (முந்தைய 14 உறுப்பு கல்லூரிகள் உள்பட) பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் 30.09.2019 அன்று பிஎச்டி, செட், ஸ்லெட், நெட், சிஎஸ்ஐஆர் கல்வி தகுதிகளுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவர்ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தெரிவித்தது.. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும், உயர்கல்வித்துறை இந்த விவகாரத்தில் விதிகளை மீறி செயல்படுவதாக கூறி தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கவுர விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன் முறைப்படுத்துவதற்கான சான்றிதழ் சாரிபார்ப்பிற்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்க செய்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 4.10.2019 அன்று வெளியிட்டது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நான் அதற்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், நியமன நடைமுறைகள் முறையாக நடக்கவில்லை. அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை பணியாற்றுவோரை பணிவரன் முறை செய்திடும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறி, உதவி பேராசிரியர்களாக நியமிக்கின்றனர். எனவே, இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும், இவ்வாறு அவா் மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுவோரை பணி வரன் முறை செய்திட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து, மனு மீதான விசாரணை தள்ளி வைத்தனர்.