கொரனோ தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், ஊரடங்கில் உணவு இல்லாமல் தவிக்கும் எளிய மக்களுக்கும் தினந்தோறும் உணவு வழங்கும் பணியை நம்ம மேட்டுப்பாளையம் குழு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்த அரிய சேவையில் கைகோர்க்கும் விதமாக மேட்டுப்பாளையம், நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ரூ 20,000 தொகையினை, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி க இந்திரா அவர்கள், உதவித் தலைமையாசிரியர் S.ஆனந்த் குமார் ஆகியோர் மூலம் வழங்கியுள்ளனர். தொடர்ச்சியாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்று தரும் இந்த பள்ளி ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையிலும் பள்ளி மாணவிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் ஸ்ரீநிதி என்ற + 1 மாணவிக்கு அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 86,000 ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர அந்த மாணவிக்கு தனிப்பட்ட வகையில் உயிரியல் பாட ஆசிரியர் திருமதி.ஜாஸ்மின் கிரிஸ்டல் அவர்கள் ரூபாய் 20 ஆயிரமும் ஆங்கிலப் பாட ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் அவர்கள் ரூபாய் 50 ஆயிரமும் வழங்கியுள்ளனர். திருமதி.ஜாஸ்மின் கிரிஸ்டல் இப்பள்ளியில் படித்த ஒரு மாணவிக்கு மருத்துவ செலவுக்காக ரூபாய் 10 ஆயிரம் வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தன்னுடைய இரு சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையில் மேற்படி மாணவிக்கு ரூ. 16,000 தொகை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, கற்பித்தல் பணியோடு நின்றுவிடாமல், மாணவிகளுக்கு தேவையான நல உதவிகளையும் செய்து வருவதை நகர் நலன் சார்ந்த பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுவது மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.