பள்ளி ஆசிரியர்கள் கவனத்துக்கு,
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் இணைந்து, கோவிட் – 19 பெருந்துதொற்று காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கற்றல் வளங்களை இணையம் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேலும் அந்த கடித்ததில், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி இல்லாத குடும்பங்களில் பயிலும் மாணவர்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கி வரும் கற்றல் வளங்களை பெற முடியாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
இணையம், தொலைக்காட்சி வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு கற்றல் வளங்களை சென்றடைய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒலிப்பாடங்கள் தயார் செய்து, அதனை வானொலி மூலம் ஒலிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிப்பாடங்கள் 15 நிமிடத்திற்கு பாடங்களை நடத்துவதாக உருவாக்கப்பட்டு, அகில இந்திய வானொலியின் 10 வானொலி நிலையங்களில் (சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி, ஊட்டி, தருமபுரி, காரைக்கால் மற்றும் நாகர்கோவில்) ஒளிப்பரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பொருள் சார்ந்து ஒலிப்பாடங்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 25ம் தேதி முதல் தொடர்ந்து வாரத்தின் 5 நாட்களும் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் ஒலிபரப்ப உள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இந்த தகவலை பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.