பள்ளி கல்வித்துறை சரவெடி போல் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்து வந்துகொண்டிருந்த நிலையில், தாக்கி திரும்பும் குறுந்தடி போன்று வந்த வேகத்தில் அறிவிப்புகள் மீண்டும் அங்கேயேத திரும்பி செல்கிறது.
என்னதான் காரணம்ன்னு பார்ப்போமா…
முதல்ல… ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு மதுரை ஐகோர்ட் கிளைதான் தடைவிதித்தது.
யாருனலன்னு பார்த்தோமன்ன புதுக்கோட்டை சேர்ந்த சண்முகநாதன் அவரால்தான். இவர் யாருன்ன, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், குளத்துகுடியிருப்பு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.
இவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செஞ்சதுல, ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தனும், அதுக்கு அப்புறமா பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தனும்ன்னும், கொரோனா காரணமா போன வருஷமும், கலந்தாய்வு நடத்துல, ஆனா, நம்ம கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாமா, நேர பதவி உயர்வு கலந்தாய்வுக்கு வந்துட்டாங்க,
அப்புறம் இந்த பதவி கலந்தாய்வு பிப்ரவரி 27, 28ம் தேதி நடக்கும் என அறிவிச்சுட்டாங்க. இதனால், பொது மாறுதலுக்கு காத்திருக்கும் ஆசிரியருக்கு பாதிப்பு ஆகும், எனவே, இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்கனும்ன்னும், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினதுக்கு அப்புறம்தான், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தனும்ன்னு, சண்முகநாதன் அந்த மனுவில் தெளிவாக சொல்லியிருந்தாரு.
இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி ஐயா எம்.எஸ் ரமேஷ் இன்னிக்கு, நாளைக்கு நடக்கவிருந்த கலந்தாய்வு தடைவிதிச்சுட்டாரு. இதே நிலைதா வட்டார அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு.
பிளான் பன்னாம இப்படி பன்ன இப்படிதான் வர்க்கவுட் ஆகாது....