இந்த தகவல் வாட்ஸ்ப் குழுக்களில் பரவி கொண்டிருக்கிறது. இந்த தகவல் உங்கள் பார்வைக்கு அப்படியே.....
*அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம்*
*கடந்த சில தினங்களாக பள்ளிக்கல்வி இயக்குனர்/ ஆணையர் பணியிடம் திரு .நந்தகுமார் I.A.S அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கு போர்க்கொடி தூக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு சில கேள்விகள்*
1. ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர் நலன், மாணவர் நலன் என்ற பெருமை பீற்றிக் கொள்ளும் நிலையில் ஏன் பள்ளிக் கல்வித் துறையில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் குறித்து ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை, வாய் திறப்பதில்லை, தீவிர போராட்டம் நடத்துவதில்லை ஏன்?
2. *ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் ,ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து 11 அரசு துறையை ஆய்வு செய்ததில், பிற அரசு துறைகளை பின்னுக்கு தள்ளி முதல் நிலையில் கல்வித்துறை உள்ளதை வீடியோ பதிவாக வெளிவந்ததை மறந்து விட்டீர்களா?*
3. ஆசிரியர் சங்கம் என்ற பெயரில், பள்ளிக் கல்வி இயக்குனர்களை உறவுக்காரர், சாதிக்காரர், சொந்தக்காரர் ,சமுதாயத்தவர், அண்ணன் எனக் கூறிக்கொண்டு இது நாள் வரை தங்களின் , ஆதரவுடன் நடைபெற்ற அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
4. *கல்வித் துறை அதிகாரிகளில் பலர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் எந்த, ஒரு ஆசிரியர் சங்கமாவது அப்படிப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என குரல் கொடுத்தது உண்டா?*
5. தமிழக அரசின் பிற துறைகளில் இயக்குனர் பணியிடம் ,I.A.S அதிகாரிகளைக் கொண்டு நியமனம் செய்யப்படும் பொழுது ஏன் கல்வித் துறையில் I.A.S அதிகாரியை நியமனம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
6. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே ஆசிரியர்களே இயக்குனர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள் என்று கூறிக் கொள்பவர்கள், நவீன காலத்திற்கேற்ப பணியிடங்களை மாற்றம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது ?
( *அன்றைக்கு மாட்டு வண்டியில் பயணித்தோம் அதற்காக இன்றும் அப்படியே பயணம் செய்ய முடியுமா?* )
7. ஊழல் கரை படிந்தவர்களை நீக்கிவிட்டு , கரை படியாத நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
8. பள்ளியின் SMDC மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பள்ளிக்குத் தேவையான பொருள்களை கொள்முதல் செய்வதை தடுத்து, தரமற்ற பொருட்களை வினியோகித்த கல்வித்துறை அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையை எதிர்த்து என்றைக்காவது குரல் கொடுத்தது உண்டா?
9. தமிழக அரசின் நிர்வாகம் மேலும் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்க முயற்சிக்காமல் , இதற்கெல்லாம் போர்க்கொடி தூக்குவது நியாயமானதா?
10. திரு. நந்தகுமார் I. A.S அவர்கள் மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த போது, பல்வேறு அதிரடி மாற்றங்களை கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைய அரும்பாடுபட்டவர். அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியை மறைமுகமாக மாற்றத் துடிப்பது ஏன்?
*போதும் போதும் ஊழல் செய்து, கூட்டுக் கொள்ளை அடித்து பல கோடிகளை ஈட்டி கல்வித் துறை சீர் கெட்டது போதும்*
*திரு.நந்தகுமார் I.A.S அவர்களின் பணி சிறக்கட்டும் நல்லாட்சி தொடரட்டும்*
உங்களில் ஒருவன்....