கல்வித்துறையில் அடுத்த கல்வியாண்டில் (2021-22) நிரப்பப்பட வேண்டிய உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சருக்கான காலிப் பணியிட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளி கல்வித்துறையில் 2021-22ம் ஆண்டுக்குரிய தங்கள் நியமன அலகுக்கான உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை – 3 ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப் பணியிட மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, 15.3.2021 ம் தேதி 14.3.2022 வரை பதவி உயர்வு, ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய காலி பணியிடங்கள் குறித்த விவரத்தை மாவட்ட கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தயார் செய்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்பு பட்டியலை தயாரித்து பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு (பணியாளர் தொகுதி) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இதனால், எதிர்வரும் காலங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |