Latest Job News in Chennai | பெண்கள் உதவி மையத்தில் பணி
Latest Job News in Chennai
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுைடயவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.
அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு
தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000.
வழக்கு பணியாளர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்குட்பட்ட சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் முன் அனுபவம் உடையவராகவும் உள்ளூரை சேர்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15000.
பன்முக உதவியாளர் காலிபணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், முன் அனுபவம் கொண்ட, உள்ளூரை சேர்ந்த பெண்களாகவும் இருக்க வேண்டும். ஊதியம் ரூ. 6400
http://chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பர் மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது
chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.